19/08/2026
யங்ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் 31ம் ஆண்டு நிறைவினை முன்னிட்டும் சாந்தன் ,ஜூட் 24 வது ஆண்டு ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியானது 22.08.2026 அன்று மாலை 7.00 மணியளவில் யங்ஸ்டார் விளையாட்டு கழக மைதானத்தில் Young Star எதிர் Friends மிகவும் கோலாகலமான முறையிலே நடைபெறவுள்ளது. எனவே அனைத்து கழக உறுப்பினர்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வருக வருக என வரவேற்கின்றோம்.
27/06/2026
யாங்ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் 32ஆம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு யாங்ஸ்டார் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் வசந்தன் ஞாபகார்த்த கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியானது நாளையதினம் வெகுவிமர்சையாக வவுனியா மாநகரசபை மைதானத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் விறுவிறுப்பான இறுதிப் போட்டியை கண்டுகளிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி
யங்ஸ்டார் விளையாட்டுக்கழகம்
வைரவபுளியங்குளம்
வவுனியா
13/06/2026
சாந்தன் & ஜூட் கிண்ணம் 2025 / 2026
யங்ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் 31ம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு யங்ஸ்டார் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் சாந்தன் ,ஜூட் ஞாபகார்த்த மின்னொளியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
அந்த வகையில் இந்த வார இறுதியில் காலிறுதி ஆட்டங்கள் நடைபெறவுள்ளது.
06/01/2026
யங்ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் 31ம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு யங்ஸ்டார் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் சாந்தன் ,ஜூட் ஞாபகார்த்த மின்னொளியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான அனைத்து கழகங்களுக்குமான அழைப்பு…
முதல் பரிசு - 100,000/=
இரண்டாம் பரிசு - 50,000/=
01/04/2025
Vavuniya DCA Div III - 2025
League Matches
Match Summary
Young Stars Vs Sevvanam
21/03/2025
Our Youngstar Boys are ready to set the stage on fire💥 Watch out, VPL Season 1🧡🫂
21/03/2025
யங் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் அடுத்த பரிமாணமாக வவுனியா மாவட்டத்தில் இளம் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் விதமாக சிறுவர் , சிறுமிகளுக்கான YS CRICKET ACADAMY எதிர்வரும் (24.03.2025) திங்கட்கிழமை மாலை 6.00 மணி அளவில் யங்ஸ்டார் விளையாட்டுக்கழக மைதானத்தில் ஆரம்பிக்கபடவுள்ளது என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .
* தகுதி வாய்ந்த பயிற்றுனரால் பயிற்சிகள் பயிற்றுவிற்கப்படும் .
* மின்னொளியிலான பயிற்சி வசதிகள் உண்டு
தொடர்புகளுக்கு : - 077 0800745
தகவல்
யங்ஸ்டார் விளையாட்டுக்கழகம்,
வைரவபுளியங்குளம் ,
வவுனியா .
14/12/2024
கடந்த ஆட்சிக்காலத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.செல்வம் அடைக்கலநாதன் மற்றும் திரு.வினோ நோகதரலிங்கம் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து எமது யங்ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த செவ்வாய்க்கிழமை (10.12.2024) அன்றையதினம் வவுனியா மாவட்ட பிரதேச செயலகத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.செல்வம் அடைக்கலநாதன் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.வினோ நோகதரலிங்கம் மற்றும் செந்தில்நாதன் மயுரன் அவர்களினால் 8 லட்சம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் எமது கழகத்திற்கு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
எனவே இச்சந்தர்ப்பத்தில் விளையாட்டு உபகரணங்கள் எமக்கு தந்து உதவிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.வினோ நோகதரலிங்கம் அவர்களுக்கும் நன்றியை தெரிவிப்பதோடு மேலும் இவ் உபகரணங்கள் எமக்கு கிடைக்கப்பெற உந்துகோளாக இருந்த முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும் & செந்தில்நாதன் நற்பணி மன்ற தலைவருமாகிய மயூரன் அண்ணா அவர்களுக்கும் எமது கழகம் சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி
யங்ஸ்டார் விளையாட்டுக்கழகம்
07/12/2024
2001 ம் ஆண்டு டிசம்பர் 7ம் திகதி அன்று நடைபெற்ற துயர சம்பவத்திலே உயிர் நீத்த எமது கழக கண்மணிகளான சாந்தன் ,ஜூட்கசன் அவர்களின் 23ம் ஆண்டு நினைவாக எமது கழகத்திலே இன்றையதினம் சனிக்கிழமை (07.12.2024) மாலை 6.30 மணியளவில் நினைவஞ்சலி நிகழ்வு செலுத்தப்படவுள்ளது . எனவே அனைத்து கழக அங்கத்தவர்களையும் இந் நினைவஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் .
நன்றி
யங்ஸ்டார் விளையாட்டுக்கழகம்