Shams T12

Shams T12

Share

O/L Batch 2012

29/07/2026

Congratulations Mrs. Aafreen Sanofar on your Graduation & Best Wishes for your future endeavours.

07/07/2026

நூல் அறிமுகம் (அல்ஹம்துலில்லாஹ்)

நூல்: மருத்துவ சமூகவியல்
நூலாசிரியர்: ஏ.ஆர். அஸ்றஜ் அஹமட்
வெளியீடு: Read More Publication

சமூகவியலை சிறப்புக் கற்கையாகக் கற்ற எனக்கு, சமூகவியல் தொடர்பான ஒரு நூலை எழுத வேண்டும் என்ற ஆவல் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற காலத்திலிருந்தே இருந்து வந்தது. அதன் விளைவாக, இந்நூலை 2022 ஆம் ஆண்டு எழுதத் தொடங்கினேன். பின்னர் தனிப்பட்ட வாழ்க்கைச் சூழ்நிலைகள், பணிச்சுமை, முதுகலைப் பட்டப்படிப்பு, ஆய்வுப் பணிகள் மற்றும் பல்வேறு பொறுப்புகள் காரணமாக நூலின் பணிகள் சில காலம் இடைநிறுத்தப்பட்டன.

எனது மனைவி தொடர்ந்து இந்நூலை முழுமையாக்கி வெளியிடுமாறு ஊக்கமளித்ததுடன், எனது அன்பிற்குரிய விரிவுரையாளர்களின் வழிகாட்டுதலும் பெரும் உந்துசக்தியாக அமைந்தது. அதன் பயனாக, கடந்த ஆண்டு இந்நூலை முழுமையாக நிறைவு செய்து வெளியிட முடிந்தது.

இந்நூலை ஒரு சிறப்பான வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்து வெளியிட வேண்டும் என்பது எனது நீண்டநாள் விருப்பமாக இருந்தது. இருப்பினும், தவிர்க்க முடியாத சில காரணங்களால் அது சாத்தியமாகவில்லை. எனவே, சமூக வலைத்தளங்களின் ஊடாக இந்நூலை அறிமுகப்படுத்தி வாசகர்களின் கரங்களில் கொண்டு சேர்க்கும் நோக்கில் இப்பதிவை வெளியிடுகிறேன்.

இந்நூலை முழுமையாக எழுதி வெளியிடும் வல்லமையையும் மனஉறுதியையும் வழங்கிய அல்லாஹ்வுக்கு முதற்கண் நன்றியைச் செலுத்துகிறேன். அல்ஹம்துலில்லாஹ்.

மேலும், இந்நூலை முழுமையாக்குவதற்காக தொடர்ந்து ஊக்கமும் ஆதரவும் வழங்கிய எனது அன்பு மனைவிக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்நூலை எழுதுவதற்கு வழிகாட்டி, கையெழுத்துப் பிரதியை முழுமையாக மீளாய்வு செய்து, நூலுக்கான சிறப்பான முன்னுரையை வழங்கிய எனது மதிப்பிற்குரிய விரிவுரையாளர் பேராசிரியர் எஸ். எம். அய்யூப் அவர்களுக்கும், நூல் எழுதும் முறை, உள்ளடக்க அமைப்பு மற்றும் ஆய்வுசார் வழிகாட்டல்களை வழங்கிய கலாநிதி எம். முஹம்மட் பைறோஸ், சிரேஷ்ட விரிவுரையாளர் அவர்களுக்கும், அத்தோடு இந் நூலின் வெளியீட்டாளர் ரீட்மொ வெளியீட்டின் நிர்வாகத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

அதேபோல், நூலின் மொழிநடை, இலக்கணம் மற்றும் எழுத்துப்பிழைகளை மீளாய்வு செய்து ஒழுங்குபடுத்த உதவிய சகோதரர் ஸிஹாம் அவர்களுக்கும், மருமகள் அஸ்ஜா அவர்களுக்கும், நூலின் மேல் அட்டையை அழகாக வடிவமைத்துத் தந்த நண்பர் அஜாஸ் பலூல் அவர்களுக்கும் எனது இதய பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நூல், மருத்துவ சமூகவியலின் அடிப்படை கருத்துக்கள் மற்றும் பயன்பாடுகளை, கோட்பாடுகளை எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறது. மருத்துவ முறைகள், நோய்களின் வகைகள், சுகயீனம், நோய்நிலை, நோய் போன்றவற்றின் எண்ணக்கரு விளக்கம். மருத்துவர்-நோயாளி உறவு, ஆரோக்கியத் தேடல் நடத்தை, மற்றும் தொற்றுநோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் ஆகியவற்றை விரிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்கத்தேய மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைமைகள், சமூக தொற்றியல், வாழ்க்கை. முறை மற்றும் சுகாதாரம் சுகாதாரக்கொள்கை வடிவமைப்பில் சமூகக்காரணிகள் ஆகியவை பற்றிய முக்கியமான விவரணங்களும் இதில் அடங்கியுள்ளன. இந் நூல், மருத்துவம், சமூகவியல் மற்றும் பொதுச்சுகாதாரம் ஆகிய துறைகளில் பயிலும் மாணவர்கள், ஆய்வாளர்கள், மற்றும் சமூகப் பணியாளர்கள் ஆகியோருக்குப் பெரும் பயனளிக்கும் ஒரு வழிகாட்டியாக அமையும்.

இந் நூல் மருத்துவ சமூகவியல் துறையின் அடிப்படை எண்ணக்கருக்களை தமிழில் எளிதாகக் கொண்டு சேர்த்துள்ளது என்று வாசகர்களின் வரவேற்பினை பெறும் என நம்புகின்றேன். இதன் மூலம் தமிழ்மொழியில் மருத்துவ சமூகவியல் துறைக்கான கல்வி வளம் மேலும் அதிகரிக்கின்றது. மேலும், இந்நூல் வாசகர்களுக்கு மருத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய துறைகளின் இணைப்பை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் என நம்புகிறேன்.

AR.Asraj Ahamed
Masters in Sociology (UOC),
BA Hons in Sociology (SEUSL),
Prof.Dip in Counseling (SEUSL)

Photos from Shams T12's post 26/06/2026

AoM’ 09 Champions Trophy 2026 !!

Photos from Shams T12's post 23/05/2026

A small contribution from Shams T12 towards making the finals even more memorable and meaningful for the champions who gave their all on the field.

Congratulations to all the winners and participants who made the event truly special! 🔥

03/05/2026

🥈 Runners-Up at the AOM’09 Champions Trophy Season 1.

We didn’t just show up. We fought for the title. We came close this time, but the job isn't done. We will be back stronger! 💪🏏

Congratulations Shams T20 for winning the Championship & for the brilliant performance !!

03/05/2026

Just one more step to glory. Into the Finals ✨

03/05/2026

One step closer. Semi Finals locked. 🚀

03/05/2026

We’ve officially qualified for the quarter-finals! Next round, let’s go! 🏆🔥

02/05/2026

We kicked off our championship run with a win in their very first match!

Let’s go 🚀🚀🚀

01/05/2026

Meet the Shams T12 Squad for the AOM’09 Champions Trophy (Season 01 – 2026). 🏏

Prepared with grit and united by a single goal: VICTORY.

Catch them live under the lights:
🏟️ Mashoor Moulana Play Ground
🗓️ May 02 & 03 (Day/Night)

Get behind the team! Let's go, Shams T12! 🏆

Want your business to be the top-listed Gym/sports Facility in Maruthamunai?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Maruthamunai
32314