18/09/2026
Sri Lanka Cricket Association for Physically Challenged සංගමය විසින් ඉදිරියේ දී පැවැත්වීමට නියමිත PD ක්රීකට් තරග සදහා Physical Disabled කාණ්ඩය යටතේ ජාතික සංචිතය තෝරා ගැනීම.
The Sri Lanka Cricket Association for Physically Challenged has decided to select the national squad under the Physical Disabled (PD) category for upcoming PD cricket matches.
The selection process for both new players with physical disabilities—who currently play leather ball cricket and have at least Division 3 club level experience or higher in regular cricket—and players currently in the Physical Disabled category of our association will commence on Monday, September 21, at 9:00 AM at the Katunayake BOI Grounds.
Note:
Visually impaired (blind) and hearing impaired (deaf) individuals are not eligible for this category.
You must forward an application containing your details to the phone number below prior to Sunday, September 20, at 1:00 PM, and bring the original copy on the day of the selection.
You must bring the cricket equipment required for your play.
Medical reports regarding your disability must be brought.
You must personally manage all your individual personal requirements
இலங்கை உடல் ஊனமுற்றோர் கிரிக்கெட் சங்கம் எதிர்வரும் PD கிரிக்கெட் போட்டிகளுக்காக Physical Disabled (உடல் ஊனமுற்றோர்) பிரிவின் கீழ் தேசிய அணிக்கான வீரர்களைத் தேர்வு செய்ய தீர்மானித்துள்ளது.
இதற்காக, தங்களது உடலில் ஏதேனும் உடல் குறைபாடு/ஊனம் இருந்து, தற்போது Leather Cricket விளையாட்டில் ஈடுபட்டு வரும், சாதாரண கிரிக்கெட்டில் குறைந்தபட்சம் Division 3 Club Level அல்லது அதற்கு மேற்பட்ட தகுதியைக் கொண்ட புதிய வீரர்களும், தற்போது எமது சங்கத்தின் Physical Disabled பிரிவின் கீழ் உள்ள வீரர்களும் இந்தத் தெரிவுச் செயல்முறையில் கலந்துகொள்ளலாம்.
வீரர்கள் தெரிவுச் செயல்முறை செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு கட்டுநாயக்க BOI விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகும்.
கவனத்திற்கு:
*பார்வையற்றவர்கள் மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள் இதில் பங்கேற்கத் தகுதியுடையவர்கள் அல்ல.
*உங்கள் முழு விபரங்களையும் உள்ளடக்கிய விண்ணப்பப் படிவத்தை செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.00 மணிக்கு முன்னர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்ப வேண்டும். அதன் அசல் பிரதியை தெரிவு நடைபெறும் தினத்தன்று கொண்டு வர வேண்டும்.
*கிரிக்கெட் விளையாடுவதற்குத் தேவையான விளையாட்டு உபகரணங்களை ஒவ்வொருவரும் தங்களுடன் கொண்டு வர வேண்டும்.
*உங்கள் உடல் குறைபாடு/ஊனம் தொடர்பான மருத்துவ அறிக்கைகளை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
உங்களுக்குத் தேவையான தனிப்பட்ட வசதிகள் மற்றும் தேவைகளை நீங்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.