10/11/2025
Divisional Youth Festival 2025
work hard dream big �
10/11/2025
Divisional Youth Festival 2025
08/11/2025
கல்முனை நேஷனல் இளைஞர் விளையாட்டு கழகத்தின் பிரகாசமான சாதனை – பிரதேச இளைஞர் விளையாட்டுப் போட்டியின் சாம்பியன்!
தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால், கல்முனை பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடத்தப்பட்ட தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி பெரும் உற்சாகத்துடன் நிறைவு பெற்றது. கல்முனை பிரதேசத்தின் பல இளைஞர் அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் வீரர்கள் தங்கள் திறமைகள், உற்சாகம் மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
இந்தப் போட்டியில் கல்முனை நேஷனல் விளையாட்டு கழகம் சிறப்பான திறமையைக் காட்டி, அனைவரின் பாராட்டையும் பெற்றது. வீரர்கள் உறுதியுடனும் முயற்சியுடனும் விளையாடி, பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் சிறந்து விளங்கினர்.
இப்போட்டிகளில் கல்முனை நேஷனல் விளையாட்டு கழகம் 10 தங்கப் பதக்கங்கள், 07 வெள்ளிப் பதக்கங்கள், மற்றும் 06 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 23 பதக்கங்களை வென்று பெருமைக்குரிய சாதனையை நிகழ்த்தியது.
இந்த சிறப்பான வெற்றியின் அடிப்படையில், கல்முனை நேஷனல் விளையாட்டு கழகம் “கல்முனை இளைஞர் விளையாட்டுப் போட்டியின் சாம்பியன்” என்ற பெருமைமிகு பட்டத்தைப் பெற்றது.
இந்த சாதனை, கழகத்தின் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகத்தின் ஒற்றுமை முயற்சிகளின் விளைவாகும். இச்சாதனை, கல்முனை இளைஞர்களுக்குப் புதிய ஊக்கத்தை அளித்து, எதிர்கால விளையாட்டு முன்னேற்றத்திற்கு ஒரு புதிய திசையையும் திறந்துவைத்துள்ளது.
06/02/2022
கிளுகிளுப்பு சங்கத்தின் ஜனாஸா நலன்புரி அமைப்பினால் மாபெரும் சிரமதான நிகழ்வு நாளை திங்கள்கிழமை (07.02.2022) சரியாக காலை 7 மணிக்கு நூராணியா மையவாடியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே இவ் சமூக பணிக்கு முடியுமான அனைத்து சகோதரர்களும் கலந்துகொள்ளுமாறு பணிவாக கேட்டுக்கொள்கிறோம்.
"மேலும் நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு நன்மையே செய்யுங்கள்"
(சூரா அல் ஹஜ் வசனம் -77)
27/06/2021
எல்லா புகழும் இறைவனுக்கே...
அல்ஹம்துலில்லாஹ்..❤️
எமது National Youth Club வீரரும்
ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பிரிவின் இறுதி ஆண்டு மாணவனும், ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான முஸ்லிம் மஜிலிஸின் பிரதிதலைவரும், எமது கிழக்கு மாகாணத்தின் அதிவேக குறுந்தூர ஓட்ட வீரருமான அன்பு நண்பன் அவர்கள் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் முதல் முஸ்லிம் மெய்வல்லுனர் அணித் தலைவராக (Athletics team captain) 2021/2022 ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்டிருப்பதை இட்டு எமது national youth club சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.....❤️
21/04/2021
மாஷா அல்லாஹ்
எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே
தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவகத்தினால் ( NISS ) நடாத்தப்படும் DIPLOMA IN SPORTS SCIENCE பயிற்சி நெறிக்கு தேர்வுப் பரீட்சையில் சித்தியடைந்து இப் பயிற்சி நெறிக்காக தெரிவு செய்யப்பட்ட எமது பிரதேசத்தை சேர்ந்த விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் ...
1. MAM.Riyal
2. AM. Jafran
3. AWM. Azad Khan
4. AJM. Safith
5. JM. Waseem
ஆகியோருக்கு எமது விளையாட்டுக் கழகம் சாரபாக
பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் , தெரிவித்துக் கொள்கிறோம்.
03/04/2021
எல்லா புகழும் இறைவனுக்கே.. ❤️
அல்ஹம்துலில்லாஹ்....🤲🏻❤️
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஏற்படு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான பிரதேச மட்ட விளையாட்டு போட்டிகளில் ஒன்றான மென்பந்து போட்டியில் *தேசிய இளைஞர் கழகம் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டு மாவட்ட மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது*...🤝🤍
Alhamdhulillah..