17/07/2026
🤞
அரியாலை திருமகள் சன சமூக நிலையத்தின் 75-வது ஆண்டு பவள விழா கரப்பந்தாட்டப் போட்டி!
நேற்று இடம்பெற்ற #இறுதிப்போட்டியில் யாழ் பல்கலைக்கழக அணியை வீழ்த்தி சாம்பியன்களானது ஆவரங்கால் இந்து இளைஞர்.. விளையாட்டுக்கழகம்.🤗
அனுபவம்,அதிரடி மற்றும் நுட்ப ஆட்டத்தின் உச்சம் ஜனன்,நிதர்சி,அசோகன் ஆகிய மூவரோடு,ஆக்க்ரோசம் நிறைந்த இளம்படை மாதுழன்,சஞ்சை,டிலக்சன் ஆகிய மூவரும் இணைய அந்த கூட்டணியோடு சிந்துவும் சேர 3:1 என்ற செற் கணக்கில் வெற்றியீட்டிய ஆவரங்கால் இந்து..
முதல் சுற்றிலே 15:07, 16:08 என்ற புள்ளிகள் அடிப்படையில் பல்கலைக்கழக அணி முன்னிலையில் இருக்க, தமக்கே உரிய பிரத்தியேகமான பாணியில் எழுச்சிகொண்ட இந்து 15:23 என்ற புள்ளிகளுக்கு முன்னேறி, இறுதில் 21:25 என்ற புள்ளிகள் கணக்கில் முதல் சுற்றை இழந்தது,
ஆனாலும் தொடர்ந்து அடுத்தடுத்த 3 சுற்றுக்களையும் அதிரடியாக கைப்பற்றி 3:1 என்ற செற்கணக்கில் வெற்றியை தமதாக்கியது.
இறுதிப்போட்டியின் சிறந்த வீரருக்கான விருதை வென்றார் ஆவரங்கால் இந்துவின் #சஞ்சை
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குழு நிலை ஆட்டங்களின் முடிவும்
அரையிறுதி போட்டிகளும்..பற்றிய சிறுபார்வை...
குழு A
A1 :ஆவரங்கால் இந்து இளைஞர்
A2 :யாழ் பல்கலைக்கழகம்
குழு B
B1 :கெருடாவில் ஐக்கியம்
B2 :புத்தூர் வளர்மதி
குழு நிலை போட்டிகளின் முடிவில்...
அரையிறுதி ஆட்டத்திலே..
குழு Aயில் அனைத்து போட்டிகளையும் வென்ற #ஆவரங்கால் இந்து இளைஞர்
#புத்தூர்_வளர்மதி அணியையும்
#யாழ்_பல்கலைக்கழக அணியானது குழு Bயில் அனைத்து போட்டிகளையும் வென்ற #கெருடாவில்_ஐக்கிய அணியையும் வீழ்த்தி
#மீண்டும் இறுதிப்போட்டியில் மோதிக்கொண்டது..
பரபரப்பான இறுதிப்போட்டியின் முடிவில் மீண்டும் யாழ் பல்கலைகழக அணியை வீழ்த்தி #சாம்பியன்களானது ஆவரங்கால் இந்து 💚
சாம்பியன்ஸ் அணியின் வீரர்கள் கஜே,சிந்து,மாது,விதுசன்,சஞ்சை,ஜெனன்,செந்தாழன்,ஜெனா,அசோகன்,நிதர்சி ஆகியோரோடு பயிற்றுவிப்பாளர் தார்மிகனையும் படத்தில் காணலாம்.
இறுதிப்போட்டி மாத்திரமன்றி தொடர் முழுவதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யாழ் பல்கலைக்கழக அணிக்கும் தொடரில் கலந்து கொண்ட அனைத்து கழகம் மற்றும் வீரர்களுக்களுக்கும்,போட்டி ஏற்பாட்டாளர்கள்,நடுவர்கள் ரசிகர்கள் என அத்தனை கரப்பந்தாட்ட பிரியர்களுக்கும் ஆவரங்கால் இந்துவின் வாழ்த்துக்கள்..
Ariyalai Jaffna Northern Province, Sri Lanka Hindu Youth Sports Club, Avarangal.