ESB Champion League

ESB Champion League

Share

பெரிய கனவின் சிறிய தொடக்கம்

14/10/2022

THE WAIT IS OVER!!
Eargen Super Boys வட மாகாண ரீதியில் நடாத்தும் பிரமாண்ட மென்பந்து கிரிக்கட் தொடரான ESB CHAMPION LEAGUE இல் அணி உரிமத்தை பெற்று இப்பெரும் பயணத்தில் பங்காளராகும் அரிய வாய்ப்பு!!

எட்டு அணிகள் மாத்திரமே இத்தொடரில் பங்குபற்ற உள்ளதால் உங்களுடைய அணி உரிமைக்கான பதிவுகளை இன்றே மேற்கொள்ளுங்கள். அணி உரிமத்தை பெற்றுக்கொள்வதற்கான இறுதித்திகதி 24/10/2022.

வீரர்களுக்கான பதிவுகள் 25/10/2022முதல் ஆரம்பமாகும்.
மேலதிக தகவல்களுக்கு இம்முகப்புத்தக பக்கத்துடன் இணைந்திருங்கள்

08/10/2022

Eargen Super Boys பெருமையுடன் வழங்கும் ESB Champion League இன் முதலாவது பருவகாலத்தின் அணி உரிமம், பணப்பரிசுகள் தொடர்பான தகவல்கள் இதோ:

💥வடமாகாணத்தை சேர்ந்த யாரும் உரிமையாளர்கள் , வீரர்களாக ESBCL இல் இணைந்தது கொள்ளலாம்
💥அணி உரிமத்திற்கான அடிப்படை தொகை 150,000 இலங்கை ரூபாய்கள். கேள்வித்தொகையை அடிப்படையாக கொண்டு அணி உரிமங்கள் முடிவு செய்யப்படும்
💥இந்த தொடரின் பிரதான பணப்பரிசுகள் கீழ்வருமாறு வழங்கப்படும் ஏனைய பணப்பரிசில்கள் தொடர்பான விபரங்கள் தொடர்ச்சியாக அறியத்தரப்படும்.
💥அணி வீரர்கள் ஏல முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொரு அணியும் தலா ஒரு வீரரை தக்கவைக்க முடியும்.

அணி உரிமம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு:
0775302813
0771837030
0773148445

30/09/2022

Eargen Super Boys பாரிய திட்டமிடல்களுடன் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டத்தையும் உள்ளடக்கி மிகவும் கோலாகலமான முறையில் நடாத்தவுள்ள ESB Champion League இன் முதலாவது பருவகாலத்தில் 8 அணிகள் ஒன்றோடு ஒன்று சமராடவுள்ளன.

மேலதிக தகவல்களுக்கு இம்முகப்பு புத்தக பக்கத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்..

29/09/2022

கனவாகவே இருந்துவரும் எம்மவர்களின் தேசிய கிரிக்கெட் அங்கீகாரத்தை செயலாக்கும் துணிவோடு தடம் பதித்திருக்கும் Eargen Super Boys 'மென்பந்திலிருந்து வன்பந்திற்கு' என்னும் ஆரம்ப தொனிப்பொருளுடன் வடமாகாண ரீதியில் ஐந்து மாவட்ட வீரர்கள், உரிமையாளர்களை உள்ளடக்கி மிக பிரமாண்டமான முறையிலே ESB Champion League என்னும் மென்பந்து துடுப்பாட்ட பிரீமியர் லீக் ஒன்றை நடாத்த முடிவு செய்துள்ளது என்பதை ESB குழுமம் சார்பாக மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

GET READY FOLKS FOR THE BIGGEST CRICKET BATTLE OF THE NORTH

29/09/2022

EXPECT THE UNEXPECTED....
#பெரிய_கனவின்_சிறிய_தொடக்கம்

Want your business to be the top-listed Gym/sports Facility in Jaffna?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Jaffna