Pioneer Sports Club -கோட்டைமுனை

Pioneer Sports Club -கோட்டைமுனை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pioneer Sports Club -கோட்டைமுனை, Sports Team, Main Road, Batticoloa.

பொது நல பதிவு ————————-01- புகைப்படம் 01:பொது காணியினை தனது சுயநலத்திற்காக சட்டவிரோதமாக தன் வசப்படுத்தும் நோக்கில் வேலி ...
11/06/2026

பொது நல பதிவு
————————-

01- புகைப்படம் 01:
பொது காணியினை தனது சுயநலத்திற்காக சட்டவிரோதமாக தன் வசப்படுத்தும் நோக்கில் வேலி போல் தாவரங்கள் வளர்த்து தற்பொழுது யார் அனுமதியும் இன்றி கற்களை கொண்டு தனியார் பாதை அமைத்துள்ளார்.
இதனால், இந்த பொது காணி (அனைவருக்கும் சொந்தமான) ஒரு நபர் பயன்பாடிற்கு மட்டுமே பயன்படும்.
இதன் விளைவால் ஏற்படும் பாதிப்புகள் கருதி, பயனியர் விளையாட்டு கழகம் மற்றும் RDS மற்றும் கோட்டைமுனை ஆலய சங்கமும் இணைந்து சட்டபூர்வமாக கோட்டைமுனை கிராம செயலாளர் (GS) ஊடக பிரதேச செயலாளரிடம்(DS) புகார் அளித்தோம். எமது புகாரை உடனடியாக DS அனுமதி செய்து, குறித்த நபருக்கு 7 நாள் அவகாசம் வழங்கப்பட்டது. எனினும் சட்ட உத்தரவை மீறி செயல்பட்டதால்- அவர் மீது GS மற்றும் DS ஊடக வழக்கு தொடர உள்ளது.

சமுதாய நலன் கருதி கழகம் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றி. இதில் தன்னலம் இல்லாமல் பொதுநலத்திற்காக குரல் கொடுத்த அனைவருக்கும் மற்றும் GS, DS, ADS, Land Officer போன்ற அரச அதிகாரிகளுக்கும் நன்றி.

++++++++++++++++++++++++
02- புகைப்படம் 02:
மேல் குறிப்பிட்ட நபரின் சட்டவிரோத செயலை உதாரணமாக கொண்டு இன்னுமொரு நபர் தனது வீட்டிற்கு பொது காணியில் பாதை அமைக்க முற்பட்ட பொழுது எமது கழகம் மீண்டும் குரல் எழுப்பியது.
மட்டக்களப்பு மாநகர முதல்வரை தொடர்பு கொண்டு பல சிரமங்களுக்கு பின் மாநகர முதல்வரை இன்று குறித்த இடத்திற்கு அழைத்து இந்த சட்ட விரோத நடவடிக்கையை சுட்டிகாட்டியதன் நிமித்தம், மாநகர முதல்வர் இறுதியில் இந்த நடவடிக்கையை நிறுத்தும் வகையில் ஆணை பிறப்பித்தார்.

இவ்வாறு பொது சொத்துகளை அல்லது பொது உரிமைகள் மீது சுயநலம் கருதி செயல்படும் நபர்கள் எதிராக நமது குரல் எப்போதும் ஒலிக்கும்!!!

இன்று 07.06.2026 பயனியர் விளையாட்டு கழக அங்கதவர்களால் பயனியர் மைதானத்தில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.இதில் கலந்துகொண்ட ...
07/06/2026

இன்று 07.06.2026 பயனியர் விளையாட்டு கழக அங்கதவர்களால் பயனியர் மைதானத்தில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.

மேலும், மாநகர சபையின் கவனத்திற்கு,
குறிப்பு: இந்த சுற்றுப்புற சூழலில் அதிகளவாக ஒழுங்கற்ற முறையில் அகற்றபட்ட வைத்தியசாலை கழிவுகளும் கண்ணாடி பொத்தல்களுமே அதிகளவில் காணப்பட்டன.

இவை இவ்வாறு ஒழுங்கற்ற முறையில் அகற்றப்படுமாயின், இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தீங்காக அமையும்.

இந்த விடயத்தில் தாங்களும் தகுந்த கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

எதிர்வரும் 26 ம் திகதி IDM Eastern Campus இன் Sports Meet ஐ முன்னிட்டு எமது மைதானத்தில் இன்று Pioneer Sports Club அங்கதவ...
22/04/2026

எதிர்வரும் 26 ம் திகதி IDM Eastern Campus இன் Sports Meet ஐ முன்னிட்டு எமது மைதானத்தில் இன்று Pioneer Sports Club அங்கதவர்கள் மற்றும் IDM Campus மாணவர்கள் இணைந்து சிரமதானம் நடத்தினர்.

பயணியர் விளையாட்டு கழக பொதுக்கூட்டம் -  2026.04.19இடம்: விஸ்வகர்ம கலாச்சார மண்டபம் நேரம்: பி.ப 4:30புதிய நிர்வாகம்:தலைவர...
19/04/2026

பயணியர் விளையாட்டு கழக பொதுக்கூட்டம் - 2026.04.19
இடம்: விஸ்வகர்ம கலாச்சார மண்டபம்
நேரம்: பி.ப 4:30

புதிய நிர்வாகம்:
தலைவர்: பா. சுதர்சன்
செயலாளர்: ஜெ. கேசவன்
பொருளாளர்: ந. வத்ஷன்
உப தலைவர்: T. ரவிச்சந்திரன்
உப செயலாளர்: அருட்பிரகாசம்

நிர்வாகசபை:
ஏ. மனோஜன்
ஏ. யுகேஷன்
த. ஹரிதாஸ்
க. நிமலகரன்
க. சத்யானந்தன்
S. கோகுலன்
தேவரஞ்சினி. சு
தி. பிரதீப்
த. கருணாகரன்

ஆலோசகர்கள்:
ஈ. குலராஜ்
ந. ஜீவகுமார்
த. ஜெயச்சந்திரன்
ஞா. லோகநாதன்

அமரர் இராசலெட்சுமி அந்தோனிப்பிள்ளை அவர்கள் இன்று காலை இறைவனடி சேர்ந்தார் என்பதனை மனவேதனையுடன் தெரிவித்துக்கொள்வதோடு,  அன...
06/06/2021

அமரர் இராசலெட்சுமி அந்தோனிப்பிள்ளை அவர்கள் இன்று காலை இறைவனடி சேர்ந்தார் என்பதனை மனவேதனையுடன் தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்

- பயனியர் விளையாட்டு கழகம் (PSC) -

2020 பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு தொகுதியில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துகள் தெரிவிப்பத...
22/08/2020

2020 பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு தொகுதியில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துகள் தெரிவிப்பதற்காக வாழ்த்துமடல் பயனியர் விளையாட்டு கழகம் சார்பாக அனுப்பி வைக்கப்பட்டது.

“ உதவி செய்ய பணமோ வயதோ அனுபவமோ அவசியமில்லை உணர்வு இருந்தால் போதும் உதவிடும் எண்ணம் தானாகவே வரும்... “மட்டக்களப்பு கோட்டை...
03/01/2020

“ உதவி செய்ய பணமோ வயதோ அனுபவமோ அவசியமில்லை உணர்வு இருந்தால் போதும் உதவிடும் எண்ணம் தானாகவே வரும்... “

மட்டக்களப்பு கோட்டைமுனை
ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய சங்கமும்
பயனியர் விளையாட்டுக்கழகமும் ஊர் பொது மக்களும் இணைந்து வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிரான் பிரதேசத்தில் உள்ள முருக்கன் தீவு சிவசக்தி வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று 03/01/2020 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது, நிகழ்வில் மட்டக்களப்பு அரசாங்க அதிபரும், கிரான் பிரதேச செயலாளரும், ஊர் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர்.

அனைவருக்கும் அன்பு வணக்கம் 🙏🏼நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக இம்முறை நடாத்தவிருந்த பொங்கல் விழா இரத்து செய்...
26/12/2019

அனைவருக்கும் அன்பு வணக்கம் 🙏🏼

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக இம்முறை நடாத்தவிருந்த பொங்கல் விழா இரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக இம்முறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்க கழத்தினரால் தீர்மானம் எடுக்கப்படுள்ளது...

ஆகவே கோட்டைமுனை மற்றும் மட்டக்களப்பு வாழ் மக்கள் தங்களால் இயன்ற உதவிகளை பொருளாகவோ, பணமாகவோ கழக உறுப்பினர்களை தொடர்பு கொண்டு சமர்ப்பிக்கலாம்.
அல்லது கோட்டைமுனை ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலும் சமர்ப்பிக்கலாம்

“ காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது “

தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்

கருணாகரன் : 076 640 2920
நிரோசன் : 071 741 1271
சரூபன் : 0752247431

Address

Main Road
Batticoloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pioneer Sports Club -கோட்டைமுனை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category