02/08/2026
NEW STAR அணியை 4-1 என வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது ராஜா ⚽🏆
ஏறாவூர் YSSC விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் தாஸீம் ஹாஜியார் வெற்றிக்கிண்ண உதைப்பந்தாட்டத் தொடரின் இன்றைய போட்டியில், விளாவட்டவான் ராஜா விளையாட்டுக்கழகம் வாழைச்சேனை நியூ ஸ்டார் அணியை எதிர்கொண்டது.
ஆட்ட நேர முடிவில் 04 - 01 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்ற ராஜா அணி, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 🔥
கோல் விபரம்:
ராஜா அணி சார்பாக:
⚽ தி. அபிநாத் - 2 கோல்கள்
⚽ சி. தருண் - 1 கோல்
⚽ சௌ. தேனுஜன் - 1 கோல்
🎖️ இப்போட்டியின் சிறந்த வீரனாக ராஜா அணியின் தி. அபிநாத் தெரிவு செய்யப்பட்டார்.
21/06/2026
"படுவான் சமர்" பருவம் - 16 இல் ராஜாவிற்கு 4ஆம் இடம்! 🏆
சிறந்த நன்னடத்தையுள்ள அணியாகவும் ராஜா விளையாட்டுக் கழகம் தெரிவு! 🤝
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக் கழகம் நடத்திய மாபெரும் "படுவான் சமர் பருவம் - 16" உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் ராஜா விளையாட்டுக் கழகம் 4ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
36 அணிகள் களமிறங்கியிருந்த, அணிக்கு 11 பேர் கொண்ட இந்த மாபெரும் படுவான் சமர் கடந்த மூன்று தினங்களாகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.
ராஜா அணியினர் எதிர்த்தாடிய அணிகள்:
⚽ கொல்லநுலை - விவேகானந்தா
01 - 00 என்ற கணக்கில் ராஜா வெற்றி
⚽ திராய்மடு - ஸ்ரீ கிருஷ்ணா
01 - 00 என்ற கணக்கில் ராஜா வெற்றி
காலிறுதிப் போட்டி:
⚽ குருந்தையடி முன்மாரி - ரென் ஸ்டார்
தண்ட உதை (Penalty) மூலம் ராஜா வெற்றி
அரையிறுதிப் போட்டி:
⚽ பட்டிப்பளை - வைரவர்
தண்ட உதை (Penalty) மூலம் தோல்வி
இப்போட்டிகளைத் திறம்பட நடத்திய கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக் கழகத்தினருக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
06/05/2026
ராஜாவின் விளாவூர் யுத்தம் - 2026 இல் மகுடம் சூடியது காஞ்சிரங்குடா நாகஒளி அணி!
06/05/2026
ராஜாவின் "விளாவூர் யுத்தம் - 2026"
2ம் இடம் : கரவெட்டி - ஆதவன்
06/05/2026
ராஜாவின் "விளாவூர் யுத்தம் - 2026"
சிறந்த வீரராக காஞ்சிரங்குடா நாகஒளி அணி வீரர் சிவகாந்தன் தெரிவு!
06/05/2026
ராஜாவின் "விளாவூர் யுத்தம் - 2026"
சிறந்த பின்கள வீரராக காஞ்சிரங்குடா நாகஒளி அணியின் விமலநாதன் தெரிவு!
06/05/2026
ராஜாவின் "விளாவூர் யுத்தம் - 2026"
சிறந்த பந்துக் காப்பாளராக கரவெட்டி ஆதவன் அணியின் ச. நிலுக்சன் (அஜித்) தெரிவு!
06/05/2026
ராஜாவின் "விளாவூர் யுத்தம் - 2026"
சுற்றுப் போட்டியின் நாயகனாக கரவெட்டி ஆதவன் அணி வீரர் த. ஜீவிதன் தெரிவு செய்யப்பட்டார்!
06/05/2026
ராஜாவின் "விளாவூர் யுத்தம் - 2026"
3ம் இடம் : கொக்கட்டிச்சோலை - ஈஸ்வரா