Sports Media

Sports Media

Share

அனைத்து விதமான விளையாட்டு செய்திகளையும் உடனுக்குடன் பார்வையிடலாம்.

Photos from Sports Media's post 10/08/2026

Applications for Special Sports Intake 2025/2026

https://1teachmore.lk/ugc-special-sports-intake-2025-2026/

Special intake for the applicants with exceptional abilities/skills in Sports to Universities -Academic Year 2025/2026

ක්‍රීඩා ක්ෂේත්‍රයේ සුවිශේෂී දක්ෂතා සහිත අයදුම්කරුවන් සඳහා විශ්වවිද්‍යාල විශේෂ ප්‍රවේශය

விளையாட்டுக்களில் தனிச் சிறப்பு வாய்ந்த திறமைகளை /திறன்களைக் கொண்ட விண்ணப்பதாரிகளுக்கான விஷேட உள்ளெடுப்பின் கீழான பல்கலைக்கழக அனுமதி 2025/2026

Closing Date: 08 September 2026

09/08/2026

SLCA தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்!

இலங்கை தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் (SLCA) புதிய தலைவராக இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில்முறை கிரிக்கெட் வீரர்களின் நலன் மற்றும் உரிமைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றுள்ளார்.

09/08/2026

ஹெரத் ஓய்வுக்குப் பிறகு இலங்கையின் சுழற்பந்து வீச்சு பலம் குறைந்தது – அஸ்வின்

ரங்கனா ஹெரத்தின் ஓய்வுக்குப் பின்னர் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சு பலம் குறைந்துள்ளதாக முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் தெரிவித்துள்ளார்.

தனது யூரியூப் சேனலில் பேசிய அஸ்வின், ஹெரத் தொடர்ந்து இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சுத் தாக்குதலை வழிநடத்தியிருந்தால், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கைக்கு சிறந்த வாய்ப்பு இருந்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் முன்னணி இடதுகை சுழற்பந்து வீச்சாளராக பிரபாத் ஜெயசூரியாவை குறிப்பிட்ட அஸ்வின், அவரது பந்துவீச்சு வேகம் சற்று குறைவாக இருப்பதால் இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு எதிராக சவாலை ஏற்படுத்துவது கடினமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், ரமேஷ் மெண்டிஸ் மற்றும் நிஷான் பீரிஸ் ஆகியோரையும் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர்களாக அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய துடுப்பாட்ட வரிசையில் பல வீரர்கள் பின்காலில் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள் என்பதால், மெதுவாக பந்துவீசும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடும் என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 15ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ள இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர்களின் செயல்திறன் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

09/08/2026

LPL வரலாற்றில் 5வது மகுடம் – வியாஸ்காந்த் புதிய சாதனை!

2020 – 🏆 Jaffna Stallions
2021 – 🏆 Jaffna Kings
2022 – 🏆 Jaffna Kings
2024 – 🏆 Jaffna Kings
2026 – 🏆 Galle Gallants

🏆🏆🏆🏆🏆 5 LPL பட்டங்கள்!

இலங்கை கிரிக்கெட் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த், LPL வரலாற்றில் 5 பட்டங்களை வென்ற வீரராக சாதனை படைத்துள்ளார்.

2020ஆம் ஆண்டு Jaffna Stallions அணியுடன் தொடங்கிய அவரது LPL பயணம், Jaffna Kings அணியுடன் நான்கு பட்டங்களையும், 2026ஆம் ஆண்டு Galle Gallants அணியுடன் மேலும் ஒரு பட்டத்தையும் சேர்த்து 5 LPL சாம்பியன் பட்டங்களாக உயர்ந்துள்ளது.

Photos from Sports Media's post 09/08/2026

Galle Gallants அணிக்கு வரலாற்றுச் சாதனை! 🏆

Lanka Premier League 2026 தொடரின் புதிய சம்பியன்களாக Galle Gallants அணி முடிசூடியுள்ளது! 🔥

📸 SLC

08/08/2026

LPL இறுதிப் போட்டி - காலி அணிக்கு 124 ஓட்டங்கள் வெற்றி இலக்கு.

லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.

கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் போட்டியில் ஜஃப்னா கிங்ஸ் மற்றும் காலி கெலன்ட்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜஃப்னா கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஜஃப்னா கிங்ஸ் அணி 19.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இந்தநிலையில் காலி அணிக்கு 124 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

08/08/2026

கோல் அணிக்காக பந்துவீச்சில் மிரட்டிய சரித் அசலங்க!

LPL 2026 இறுதிப்போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் அணியின் துடுப்பாட்டத்தை சிதறடித்த கோல் கெலன்ட்ஸ் அணியின் சரித் அசலங்க 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்!

Charith Asalanka – 3/20 🎯🔥

Photos from Sports Media's post 08/08/2026

கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு சிறப்பான வெற்றி!

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சம்மேளனம் நடத்தும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான Division III, 17 வயதுக்குட்பட்ட கடினபந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில், கல்முனை ஸாஹிரா கல்லூரி அணி, காத்தான்குடி மத்திய கல்லூரி அணியை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய காத்தான்குடி மத்திய கல்லூரி அணி, 28.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 127 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Zahira College Kalmunai அணி, 28 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்று, 5 விக்கெட்டுக்களால் வெற்றியைத் தனதாக்கியது.

இந்த வெற்றியின் மூலம் பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ள வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்கள்!

08/08/2026

LPL 2026 இறுதிப்போட்டியில் சிறப்பு விருந்தினராக ஜஹீர் கான்!

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் Jaffna Kings அணியின் இணை உரிமையாளருமான ஜஹீர் கான், கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் LPL 2026 இறுதிப்போட்டியை நேரில் பார்வையிட்டு வருகிறார்.

சாம்பியன் பட்டத்திற்காக Jaffna Kings மற்றும் Galle Gallants அணிகள் மோதும் நிலையில், தனது அணிக்கு ஆதரவளிக்கும் வகையில் ஜஹீர் கான் மைதானத்தில் நேரில் கலந்துகொண்டுள்ளார்.

Photos from Sports Media's post 08/08/2026

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பெய்து வந்த மழை தற்போது நின்றுள்ள நிலையில், மைதானத்தில் போடப்பட்டிருந்த Covers அகற்றப்பட்டு வருகின்றன.

LPL 2026 இறுதிப்போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவதற்கான நம்பிக்கை அதிகரித்துள்ளது!

Want your business to be the top-listed Gym/sports Facility in Ampara?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


233B Meera Nagar Road Nintavur/11
Ampara