Are you ready 🔥
VIJAYA FOUNDATION MPL 2026 -MARCH
MEGA AUCTION 💫
Vavunathivu warriors
✨🏏🥀
07/05/2025
Happy Retirement Rohit Sharma 👏
06/05/2025
ஐபிஎல்-ல எந்த ஒரு விஷயத்தைப் பத்தி பேசும்போதும் ஒரே ஒருத்தரை மட்டும்தான் GOAT-ன்னு சொல்ல முடியும். யாரை பெஸ்ட் பேட்ஸ்மேன்னு கேட்டாலும், பெஸ்ட் ஃபீல்டர் யாருன்னு கேட்டாலும், இல்ல கேப்டன் யாருன்னு கேட்டாலும் ரெண்டு மூணு பேர் போட்டிக்கு வருவாங்க. ஆனா பவுலர்னு வரும்போது யோசிக்கவே தேவையில்லை. ஒரே ஒருத்தர்தான் GOAT. அது நம்ம லசித் மலிங்கதான்! 🐐💙
மலிங்கா பவுலர்கள்ல ஒரு தனி ஆள்தான். ஒரு பக்கம் எல்லாரும் அடி வாங்கும்போது டெத் ஓவர்ல வந்து தன்னோட ரெண்டு ஓவர்லேயே ஆட்டத்தை மாத்தி ஜெயிச்ச மேட்ச் நிறைய இருக்கு. எகானமியும் விக்கெட் எடுக்கிற திறமையும் ஒரே மாதிரி வச்சிருந்த வேற ஒரு பவுலர் ஐபிஎல் வரலாற்றிலேயே கிடையாது.
எப்பவுமே பெஸ்ட்! ❤️🔥
#லசித்மலிங்கா #மலிங்காGOAT #ஐபிஎல் #கிரிக்கெட் #மும்பைஇந்தியன்ஸ் #டெத்ஓவர்ஸ்பெஷலிஸ்ட் #யார்_பெஸ்ட்_பவுலர் ிங்கா #சின்ன_சிங்கம் #கிரிக்கெட்_ஃபீவர்
17/04/2025
புதுசா batகளை check பண்றாங்க. இதுக்கு முன்னாடி இத்தன வருசத்துல நாம இதை பாத்ததில்ல.
இதை எப்பவும் dressing roomலயே பண்ணி முடிச்சுருவாங்களாம். இப்ப வெளிப்படையா பண்றாங்க, batsman 2 bat use பண்றதாலயும் அதை வெளிய ஒருதடவ check பண்றாங்க. இப்படி பண்ணனும்னு instruct பண்ணீருக்காங்க umpireகளுக்கு. 👍
அகலம் 10.8 cm , பக்காவாட்டு உயரம் 6.7 cm, தடிமன் 4 Cm. (எதை சொல்றாங்கன்னு imageல இருக்கு 👇)
இந்த அளவுகள்ல bat இருக்கனும். அது வீடு மாதிரி ஒரு அட்டைல நுழையனும். அப்ப அந்த bat testல pass.
இப்படி அளக்கறதுக்கு இன்னொரு சுவாரசியமான காரணமும் சொல்றாங்க. போன IPLல 10 - 200+ scoreகள்தான் வந்தது. இப்ப 2வது வாரத்துலயே 19 - 200+ totals வந்துருச்சு. 🙄😯
Bowlerகளுக்கும் ஆட்டம் கொஞ்சம் சாதகமா இருக்கனும்னு, bat காரணமா அதிக ரன்கள் வரக்கூடாதுன்னு இதை strictஆ check பண்றாங்களாம் BCCI.
BAT GUAGE TEST
13/04/2025
ஆனா டேய் கிரவுண்ட் உள்ள வர முன்னாடியே 100 ரன் தாண்டாம Dugout போக கூடாதுனு முடிவோட பேப்பர் ல எழுதி எடுத்து வரதெல்லாம் Insane 🥵🔥 That confidence & Determination 🤩 இவன் ஒரு Rare Breed 👺🧡
12/04/2025
நல்ல விளையாட்டால் மட்டுமே ஒரு வீரர் மதிக்கப்பட மாட்டார், கூடவே இருக்கும் நற்பண்புகள் அதற்கு முக்கிய காரணமாக இருக்கும். ஒரு வீரரின் பெயரை சொன்னால் எப்போதும் இந்த கிரிக்கெட் உலகம் அவரை கிரிக்கெட்டின் கடவுள் என்றே சொல்லும் .
ஆம் சச்சினுக்கு பலமுறை தவறான அவுட் வழங்கிய ஒரு நடுவர் ஸ்டீவ் பக்னர் தவறான அவுட் வழங்கி விட்டார் என்று சச்சின் ஒருமுறை கூட அவரிடம் வாக்குவாதம் செய்தது இல்லை, முகம் சுழித்து கொண்டது இல்லை , தகாத வார்த்தைகள் பேசியது இல்லை , அதிருப்தியை வெளிக்காட்டியது இல்லை இப்போது சச்சினை பற்றி ஸ்டீவ் பக்னர் கூறியிருப்பதாவது, சச்சின் கிரிக்கெட் விதிகளுக்காகவே படைக்கப்பட்டவர் ,அவர் நடுவர்களுக்கு எதிராக ஒரு போதும் தன் கைகளை உயர்த்தியது இல்லை, நான் கண்ட வீரர்களில் சச்சினை போல ஒரு கிரிக்கெட் வீரனை இந்த உலகம் இன்னும் கண்டதில்லை என புகழாரம் சூட்டி உள்ளார்..!!💜
10/04/2025
10-2 இருக்கும் போது உள்ள வந்தான்...அந்த பக்கம் வாரவன்லாம் வந்த வேகத்துல கிளம்பி வெளிய போய்கிட்டு இருந்தாங்க... Dc கதை முடிஞ்சுருச்சுனு எல்லாம் Tv ah off பண்ணிட்டு தூங்கிருப்பாங்க, தூங்கி எந்திரிச்சு பாக்கும் போது.. அட gomthaa எப்படி டா Dc ஜெயிச்சானுங்கனு கண்ணு பிதுங்கி பாத்தா... அங்க ரோல்ஸ் ராய்ஸ் ராகுல் தனி ஆளா சம்பவத்தை பண்ணிட்டான்.. 🔥 93(53) 7 four, 6 sixes..
Skipper, Virat, Jitesh powers RCB to post 221/5
07/04/2025
Cricket வரலாற்றை திரும்பிப்பாா்த்தால் போட்டிகளில் வெற்றி பெற பல தந்திரங்களை அணிகள் பாவித்திருக்கின்றன. பொதுவாக திறமையான வீரா்கள் உள்ள அணியை வீழ்த்த தந்திரங்கள் பாவிப்பது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. 1930களில் இங்கிலாந்து அணியின் பாடிலைன்(bodyline) பந்துவீச்சு முறையிலிருந்து 80களின் பாகிஸ்தானின் ரிவோ்ஸ் ஸ்விங் வரை எல்லாம் தந்திரங்கள்தான்.
2013ம் ஆண்டு நடைபெற்ற இருபதுக்குஇருபது போட்டியொன்றில் இலங்கையணி அவுஸ்திரேலியாவை மயிாிழையில் வென்றது. இவ்வெற்றிக்கு காரணம் கடைசி நேரத்தில் இலங்கையணி கைக்கொண்ட தந்திரம்தான்.
இந்த தந்திர(cunning) வெற்றியின் கதாநாயகன் இலங்கை அணியின் முன்னாள் தலைவா் மஹேல ஜயவா்தன ஆவாா். பாடசாலை காலத்திலிருந்தே களத்தில் பல சூட்சுமங்களை கையாண்டு சீனியா் வீரா்களை கவா்ந்தவா்.
இப்போட்டி அவுஸ்திரேலியாவில் நடைபெற்றது. போட்டியின் நடுவே மழை பொழிந்ததால் ஆஸி அணிக்கு 122 என்ற இலக்கு கொடுக்கப்பட்டது. ஒருவழியாக கடைசி மூன்று பந்துகளில் 12 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலைக்கு ஆஸி அணி வந்தது.
துடுப்பாடிக்கொண்டிருந்தவா் மக்ஸ்வெல், பந்து வீசிக்கொண்டிருந்தவா் திஸர பெரேரா.
இரண்டு பௌண்டாிகளை அடுத்தடுத்து விளாசுகிறாா் மக்ஸ்வெல். இப்போது ஒரு பந்தில் 4 ஓட்டங்களை பெற்றால் வெற்றி. பந்துவீச செல்கிறாா் திஸர ஆனால் தடுத்து நிறுத்துகிறாா் மஹேல. இப்போதுதான் காலம் கடத்தும் தந்திரத்தை பயன்படுத்துகிறாா் மஹேல.
அணி மூத்த வீரா்களை அழத்து களத்தின் நடுவே ஒரு கூட்டம் நடத்துகிறாா்.
அடுத்த பந்து எவ்வாறு வீசப்படவேண்டும், களத்தடுப்பை எவ்வாறு செட் செய்ய வேண்டும் என்பன பற்றி கதைத்திருப்பாா்கள் என்று நீங்கள் யோசித்தால் ஏமாந்தீா்கள். மாறாக சந்தா்ப்பத்திற்கு தேவையில்லாத விடயங்களை பற்றி பேசி நேரத்தை கடத்திக்கொண்டிருந்தாா்கள். இப்போதுதான் தந்திரம் வேலை செய்ய ஆரம்பிக்கிறது.
பொறுமை இழந்த மக்ஸ்வெல் இலங்கை வீரா்களை பந்துவீச அழைக்கிறாா். மக்ஸ்வெல்லின் மண்டையில் சூடு ஏற ஆரம்பிக்கிறது.
இலங்கை வீரா்கள் தாங்கள்பாட்டிற்கு எாிகி*ன்ற நெரு*ப்பில் எண்ணையில் ஊற்றுகின்றனா். உன் வேலையை நீ பாா் என்று கூவுகின்றனா். இப்போது மக்ஸ்வெல்லின் மூளை நன்றாக குழம்பி விட்டது. இந்த தருணத்தை தான் மஹேல எதிா்பாா்த்தாா். உடனே திஸரவிடம் பந்தை வீச சொல்கிறாா். திஸரவும் ஓடிச்சென்று பந்தை வீசுகிறாா். இலகுவாக அடிக்ககூடிய பந்தை நோக்கி மட்டையை விளாசுகிறாா் மக்ஸ்வெல். பந்து மட்டையில் படவேயில்லை. மஹேலவின் தந்திரம் பலித்தது. இலங்கைக்கு வெற்றி.
https://youtu.be/CnhibiST7H8
இந்த காலம் கடத்தும் தந்திரத்தை பல்வேறு விளையாட்டுகளில் வீரா்கள் பயன்படுத்துகிறாா்கள். குறிப்பாக டென்னிஸ் ஜாம்பவான்களான நடால், ஜோகோவிச் மற்றும் சிலிச் போன்றோா் இத்தந்திரத்தை பயன்படுத்தி போட்டிகளை வெல்கின்றனா்.
நன்றி: கோரா
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Batticaloa