Power star sports club Oluvil.

Power star sports club Oluvil.

Share

sports club oluvil

21/06/2026

அல்ஹம்துல்லாஹ்.....

எமது அணியின் ஆரம்பகால சகல துறை ஆட்டக்காரர் mnm raseem மீண்டும் தனது தாய் கழகமாகிய பவர் ஸ்டார் விளையாட்டு கழகத்துடன் இணைந்து இனிவரும் காலங்களில் கழகம் சார்பாக அனைத்து போட்டிகளிலும் பங்கு கொள்ளுவார் என்பதை அனைத்து கழகத்திற்கும்
அறியத் தருகிறோம்.

Photos from Power star sports club Oluvil.'s post 20/06/2026

அல்ஹம்துலில்லாஹ் 🤲
அல்ஹம்துலில்லாஹ் 🤲
அல்ஹம்துலில்லாஹ் 🤲

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ......

REAL NAJA T10 CHAMPION TROPHY
2026
POWER STAR SC INTO THE QUARTER FINAL SELECT 💗🔥

சம்மாந்துறை மண்ணில் மிகவும் விமர்சையாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அணிக்கு 11 பேர் 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட விலகல் முறையிலான மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பலம் வாய்ந்த முன்னணி கழகங்களை வீழ்த்தி எமது ஒலுவில் POWER STAR விளையாட்டு கழகம் முதலாவது நாளில் கால்யிறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது

இச் சுற்றுப் போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடிய எமது கழகத்தின் சகல துறை வீரர்களுக்கும் மற்றும் ஆதரவுகளை வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் இச் சுற்றுப் போட்டியினை மிகவும் நேர்த்தியாக நடாத்தி கொண்டிருக்கும் REAL NAJA விளையாட்டு கழகத்திற்கு எங்களது கழகம் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்

20/06/2026
Photos from Power star sports club Oluvil.'s post 19/06/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

அணைத்து விதமான bat பழுது பார்த்தல் வேலைகளும் குறைந்த நேரத்தில் நியாயமான விலையில் உடனுக்குடன் செய்து தரப்படும் நீங்கள் நாட வேண்டிய ஒரே இடம் Best edge

01.புடி போடுதல் - 800/-
02.துண்டு போடுதல் - 400/-
03.பாரம் குறைத்தல் - 300/-
04.புடி போடுதல், துண்டு போடுதல் & பாரம் குறைத்தல் - 1500/-

17/06/2026

அல்ஹம்துலில்லாஹ் 🤲
அல்ஹம்துலில்லாஹ் 🤲
அல்ஹம்துலில்லாஹ் 🤲

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ......

MUTHTHAKEEN MEGA NIGHT CHAMPION TROPHY
SEASON 03- 2026
POWER STAR SC INTO THE SEMI FINAL 💗🔥

நிந்தவூர் மண்ணில் மிகவும் விமர்சையாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அணிக்கு 08 பேர் 05 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட விலகல் முறையிலான மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பலம் வாய்ந்த முன்னணி கழகங்களை வீழ்த்தி எமது ஒலுவில் POWER STAR விளையாட்டு கழகம் முதலாவது நாளில் அரையிறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இச் சுற்றுப் போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடிய எமது கழகத்தின் சகல துறை வீரர்களுக்கும் மற்றும் ஆதரவுகளை வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் இச் சுற்றுப் போட்டியினை மிகவும் நேர்த்தியாக நடாத்தி கொண்டிருக்கும் முத்தக்கீன் விளையாட்டு கழகத்திற்கும் மற்றும் எங்களது நிர்வாகத்திற்கும் இதய பூர்வமான நன்றிகளை வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

17/06/2026

அல்ஹம்துலில்லாஹ்

கழக அங்கத்தவர் அறிமுகம்..

எமது கழகத்தோடு 17.06.2026 உத்தியோக பூர்வமாக natheer இணைந்து கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்

தொடர்ந்தும் கழகத்தோடு கழக செயற்பாடுகளில் பயணிப்பார் என்றும் கழகத்திற்காக அனைத்து போட்டிகளிலும் பங்கு பற்றுவார் என்றும் உத்தியோக பூர்வமாக அறியத்தருகின்றோம்..

We are power star family..
Power Star sports club
Oluvil

Photos from Power star sports club Oluvil.'s post 07/06/2026

அல்ஹம்துலில்லாஹ் 🤲
அல்ஹம்துலில்லாஹ் 🤲
அல்ஹம்துலில்லாஹ் 🤲

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபாரக்காத்தஹு....

எமது கழகத்தின் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் எமது கழகத்தின் சிரேஷ்ட வீரர்கள் , மற்றும் எமது கழக நிர்வாக உறுப்பினர்களின் நிதி உதவியினால் எமது கழக வீரர்களுக்கு பாதணிகள் அன்பளிப்பு செய்யப்பட்டது. அன்னாரின் இவ் மகத்தான பணிக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ALWAYS POWER STAR FAMILY

Photos from Power star sports club Oluvil.'s post 02/06/2026

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْم

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ

அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!

அல்லாஹ்வின் பேருதவியால் Power Star Premier League (PSPL) – Season 06 | 2026 மிகவும் சிறப்பாகவும், உற்சாகமாகவும், சகோதரத்துவ உணர்வுடன் கூடிய முறையிலும் வெற்றிகரமாக நடைபெற்று நிறைவடைந்தது.

இந்த வருடத் தொடரில் மூன்று அணிகள் பங்கேற்றன. அணிகளுக்கான உரிமையாளர்களாக பின்வரும் சகோதரர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்:

🏏 Power Star Heroes
👤 உரிமையாளர்: Aslal

🏏 Power King Boys
👤 உரிமையாளர்: Nusrin

🏏 Power Star Strikers
👤 உரிமையாளர்: Siyath

பல சிறப்பான போட்டிகள், விறுவிறுப்பான தருணங்கள் மற்றும் வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்திய ஆட்டங்களுடன் இத்தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

🏆 தொடரின் இறுதி முடிவுகள்

🥇 Champion Team – Power King Boys
🏆 உரிமையாளர்: Nusrin

🥈 Runners-Up – Power Star Strikers
🏆 உரிமையாளர்: Siyath

🥉 Third Place – Power Star Heroes
🏆 உரிமையாளர்: Aslal

வெற்றியடைந்த அணியினருக்கும், இறுதிப்போட்டி வரை போராடிய அனைத்து அணிகளுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

⭐ தனிநபர் விருதுகள்

🏅 Man of the Series – Ashraf

தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்திறன், நிலைத்தன்மை மற்றும் அணிக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி இந்த மதிப்புமிக்க விருதை வென்றுள்ளார். அவருக்கு எமது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

🏅 Young Player of the Tournament – Hasnas

இளம் வீரராக இருந்தபோதிலும் தனது திறமையையும் எதிர்கால நம்பிக்கையையும் வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். அவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

🤝 எமது அனுசரணையாளர்களுக்கு நன்றிகள்

இந்த சுற்றுப்போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு நிதி மற்றும் பல்வேறு வழிகளில் ஆதரவு வழங்கிய எமது அனுசரணையாளர்களுக்கு (Sponsors) விசேட நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

🔹 Japan Motors
🔹 Minha Tex
🔹 Nasreen Construction
🔹 Anchor
🔹 Rijai

உங்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் இல்லாமல் இந்தத் தொடரை இவ்வளவு சிறப்பாக நடத்துவது சாத்தியமாகியிருக்காது. அல்லாஹ் உங்கள் வியாபாரங்களிலும் குடும்பங்களிலும் பரக்கத்தையும் வெற்றியையும் வழங்குவானாக. ஆமீன்.

🌹 நன்றிகள்

இத்தொடரில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும், அணியுரிமையாளர்களுக்கும், ஏற்பாட்டுக் குழுவினருக்கும், நடுவர்களுக்கும், மைதான ஏற்பாடுகளில் உதவிய அனைவருக்கும், நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்களித்த அனைத்து சகோதரர்களுக்கும் எமது இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வெற்றி தோல்வியைத் தாண்டி, சகோதரத்துவம், ஒற்றுமை, விளையாட்டு ஒழுக்கம் மற்றும் பரஸ்பர மரியாதை என்பவற்றை மேலும் வலுப்படுத்திய ஒரு சிறந்த தொடராக Power Star Premier League – Season 06 அமைந்தது என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

அல்லாஹ் இந்த முயற்சியைப் பொருந்திக்கொண்டு, எதிர்வரும் ஆண்டுகளில் இதைவிட சிறந்த முறையில் இந்தத் தொடரை நடத்தும் தௌபீக்கையும் பரக்கத்தையும் அனைவருக்கும் வழங்குவானாக.

ஜஸாகுமுல்லாஹு கைரன்.

Power Star Premier League (PSPL) – Season 06 | 2026 🏏🏆✨

---

✍️ Prepared By:
S.M. Sowfan
Media Team Leader
Power Star Premier League (PSPL) – Season 06 | 2026 🏏🏆✨

01/06/2026

அல்ஹம்துலில்லாஹ்

கழக அங்கத்தவர் அறிமுகம்..

எமது கழகத்தோடு 01.05.2026 உத்தியோக பூர்வமாக rasly mihas இணைந்து கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்

தொடர்ந்தும் கழகத்தோடு கழக செயற்பாடுகளில் பயணிப்பார் என்றும் கழகத்திற்காக அனைத்து போட்டிகளிலும் பங்கு பற்றுவார் என்றும் உத்தியோக பூர்வமாக அறியத்தருகின்றோம்..

We are power star family..
Power Star sports club
Oluvil

Want your business to be the top-listed Gym/sports Facility in Addalachenai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Addalachenai